D50 : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘D50’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • February 8, 2024 / 02:48 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என 3 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் தனுஷின் கேரியரில் 50-வது படமாம். தனுஷே இயக்கி வரும் இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ‘ராயன்’ என டைட்டில் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தை வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus