நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படம் OTTயிலா?

  • July 7, 2020 / 02:18 PM IST

கொரோனா லாக்டோன் காரணமாக நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் திரையரங்குகளில் வெளியிடவிருந்த படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடியில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஜோதிகா நடிப்பில் “பொன்மகள் வந்தாள்”, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “பெண்குயின்” போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

தயாரிப்பாளர்கள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடியில் படங்களை வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் திரையரங்குகளை விட ஒரு மடங்கு அதிக பணம் கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் படங்களை பெற்றுக்கொள்கிறதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக கொடுக்க சம்மதிக்கிறார்கள்.

இந்த வரிசையில் பெரிய நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வந்தால் கண்டிப்பாக ஓடிடி தளங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் அமேசான் எனும் ஓடிடி தளம் எப்படியாவது தனுஷின் அடுத்த படத்தை வாங்கியாக வேண்டும் என்று போராடி வந்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம்”. மே மாதம் வெளியிடப்படவிருந்த இந்த திரைப்படம் கொரோனா லாக்டோன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தயாரிப்பாளரை மனதில் வைத்து இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்புக் கொண்டுள்ளாராம். அதனால் தயாரிப்பாளர் சசிகாந்த் ஒரு பெரிய தொகைக்கு அமேசான் நிறுவனதிற்கு இந்த படத்தை விற்றுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படமாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிடவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அடுத்த அப்டேட்காக அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus