தனுஷ் நடிப்பில் “ஜகமே தந்திரம்” திரைப்படம் எப்போது வெளியாகும்?
December 2, 2020 / 12:11 AM IST
|Follow Us
தமிழில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், 2002 ஆம் ஆண்டு “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படவுலகிற்கு அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “பட்டாசு”. ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் கொரோனா லாக்டவுனிற்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்”படத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற செய்தி பரவி வருகிறது.
வொய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.