தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், பாலாஜி மோகன் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வந்தார். மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லக்ஷ்மி ப்ரியா, லால், நட்டி, ஜி.எம்.குமார் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, ‘கொரோனா’ பிரச்சனையால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் Original Background Score வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார்.
Sip a hot cup of coffee and get some dose of good music
Play
the magical #KarnanOriginalScore
by @Music_Santhosh
https://t.co/UZawAFQpSU@dhanushkraja @mari_selvaraj @theVcreations @rajisha_vijayan @LakshmiPriyaaC @thenieswar @EditorSelva #HBDSanthoshNarayanan pic.twitter.com/HIz1J59mTw
— Think Music (@thinkmusicindia) May 15, 2021