திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள தனுஷின் ‘கர்ணன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • April 9, 2021 / 12:01 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 9-ஆம் தேதி) இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வருவாராம்.

மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லால், அழகம் பெருமாள் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

1

2

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus