தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாறன்’ படத்தின் ட்ரெய்லர் விமர்சனம்!
February 28, 2022 / 04:32 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் கார்த்திக் நரேன் – தனுஷ் காம்போவில் தயாராகியுள்ள ‘மாறன்’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் ரிலீஸானது. இந்த மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு பாப்புலர் பாடலாசிரியர் விவேக் – பாப்புலர் மலையாள எழுத்தாளர்கள் ஷர்ஃபு – சுஹாஸ் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற மார்ச் 11-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.