ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் பட வில்லனுக்கு படுகாயம்… ICU-வில் அனுமதி!

  • October 8, 2020 / 01:33 PM IST

மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக மிரட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது டொவினோ தாமஸ் நடிப்பில் ‘மின்னல் முரளி, வரவ், கலா, கானேகானே’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கலா’ என்ற மலையாள படத்தை இயக்குநர் ரோஹித்.வி.எஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் லால், திவ்யா பிள்ளை, சுமேஷ் மூர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனை ‘ஜுவிஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரித்து வருகிறது. அட்வெஞ்சர் த்ரில்லர் படமான இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் போது நடிகர் டொவினோ தாமஸுக்கு படுகாயம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட டொவினோவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus