தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘அமேசான் ப்ரைம்’?

  • September 30, 2022 / 12:13 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகியுள்ள ‘நானே வருவேன்’ படம் இன்று (செப்டம்பர் 29-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் மிக முக்கிய ரோல்களில் செல்வராகவன், பிரபு, இந்துஜா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளாராம். தற்போது, இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘அமேசான் ப்ரைம்’ நிறுவனம் ரூ.25 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus