தனுஷ் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘நானே வருவேன்’ படத்தின் ‘ரெண்டு ராஜா’ பாடல்!

  • September 24, 2022 / 03:05 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என 7 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் மற்றும் ‘வீரா சூரா’ என்ற சிங்கிள் டிராக் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டீசர் மற்றும் சிங்கிள் டிராக் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இதில் மிக முக்கிய ரோல்களில் செல்வராகவன், பிரபு, இந்துஜா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறாராம்.

இன்று இப்படத்தின் ‘ரெண்டு ராஜா’ என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். தனுஷ் இப்பாடலை எழுதியதுடன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். படத்தை வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus