தனுஷின் ‘நானே வருவேன்’ டீசர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • September 14, 2022 / 08:22 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என 7 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் ‘நானே வருவேன்’ படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் ‘வீரா சூரா’ என்ற சிங்கிள் டிராக் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த போஸ்டர்ஸ் மற்றும் சிங்கிள் டிராக் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறாராம். இம்மாத இறுதியில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நாளை (செப்டம்பர் 15-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த டீசரை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus