தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். 2007-ஆம் ஆண்டு ‘பொல்லாதவன்’ படத்தில் துவங்கிய இவரின் வெற்றிப் பயணம், ‘ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன்’ வரை தொடர்ந்திருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கிய ஐந்து படங்களில், பிரபல நடிகர் தனுஷ் தான் நான்கு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸிற்கான ஆந்தாலஜி படம், காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம், சூர்யாவின் ‘வாடிவாசல்’, ‘தளபதி’ விஜய் ஹீரோவாக நடிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஆந்தாலஜி படத்துக்கான ஷூட்டிங் ஏற்கனவே முடிந்து விட்டதாம். வெகு விரைவில் சூரி படம் மற்றும் ‘வாடிவாசல்’ படங்களின் ஷூட்டிங்கை துவங்க ப்ளான் போட்டு வருகிறார் வெற்றிமாறன்.
சமீபத்தில், இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் 5-வது முறையாக இணையப்போகிறார்கள் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இதனை எல்ரெட் குமார் தனது ‘RS இன்ஃபோடெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. தற்போது, இந்த தகவலை தயாரிப்பாளர் எல்ரெட் குமாரே ட்விட்டரில் உறுதிபடுத்தியிருக்கிறார். ஐந்தாவது முறையாக தனுஷ் – வெற்றிமாறன் காம்போவில் ரெடியாகும் படம் என்பதால் இப்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது.
@dhanushkraja @VetriMaaran New Project Pandrangala unga kuda Athu Mattum Confirm pannuga bro Pothum..#HBDVetrimaaran #JagamaeThandhiram
— DHANUSH BALA (@ItzDhanushbala) September 4, 2020
Yes bro
— Red (@elredkumar) September 4, 2020