போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் பிரம்மாண்ட வீடு… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க உள்ளாராம். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாம்.

Dhanush's New House Budget1

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இந்த படத்துக்காக தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜை நடைபெற்றது. தற்போது, இந்த வீடு ரூ.150 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாய் கட்டப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.