Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

  • February 19, 2024 / 06:51 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என 3 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் தனுஷின் கேரியரில் 50-வது படமாம். தனுஷே இயக்கி வரும் இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் சந்தீப் கிஷன், மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிக்கின்றனர்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, இந்த படத்துக்கு ‘ராயன்’ என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை தனுஷே தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளார்.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus