Captain Miller : அருண் மாதேஸ்வரனின் ‘கேப்டன் மில்லர்’-க்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • January 13, 2024 / 12:20 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கேப்டன் மில்லர்’ படம் நேற்று (ஜனவரி 12-ஆம் தேதி) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகர் தனுஷ் ரூ.20 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus