அடேங்கப்பா… ‘நானே வருவேன்’ படத்துக்காக தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • October 25, 2022 / 10:27 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், கேப்டன் மில்லர், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் உருவான ‘நானே வருவேன்’ படம் கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரபு, இந்துஜா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதனை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் தனுஷ் ரூ.13 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus