ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’-யில் இடம்பெறும் தனுஷின் சண்டைக் காட்சி வெளியீடு!

  • July 12, 2022 / 01:08 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர்’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘தி கிரே மேன்’ (The Gray Man) படத்தை ‘அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர்கள் அந்தோணி ருஸ்ஸோ – ஜோ ருஸ்ஸோ இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் ரையன் கோஸ்லிங், க்ரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெஸிக்கா ஹென்விக், வாக்னர் மௌரா, ஜூலியா பட்டர்ஸ், ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் மிக முக்கிய ரோலில் தனுஷ் நடித்துள்ளாராம். ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில், வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

படத்தை வருகிற ஜூலை 22-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் தனுஷின் சண்டைக் காட்சியை வெளியிட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus