தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?
April 27, 2022 / 11:29 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘தி க்ரே மேன்’ (The Gray Man) படத்தை ‘அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர்கள் அந்தோணி ருஸ்ஸோ – ஜோ ருஸ்ஸோ இணைந்து இயக்கி வருகின்றனர். இப்படத்தில் ரையன் கோஸ்லிங், க்ரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெஸிக்கா ஹென்விக், வாக்னர் மௌரா, ஜூலியா பட்டர்ஸ், ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் மிக முக்கிய ரோலில் தனுஷ் நடித்துள்ளாராம். ‘தி க்ரே மேன்’ என்ற பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. படத்தை வருகிற ஜூலை 22-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.