அடேங்கப்பா… தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • October 25, 2022 / 04:03 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்கியிருந்தார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மற்றும் பாப்புலர் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.117.2 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus