தனுஷ் – மித்ரன்.ஆர்.ஜவஹர் கூட்டணியில் உருவாகும் ‘திருச்சிற்றம்பலம்’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

  • August 31, 2021 / 10:27 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ராயன், மாறன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம்’, இயக்குநர்கள் ராம் குமார், வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் என மூன்று ஹீரோயின்ஸ் நடிக்கின்றனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மற்றும் பாப்புலர் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இதன் முதல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், படத்தின் இரண்டாவது ஷெடியூல் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus