அடேங்கப்பா… 13 நாட்களில் தனுஷின் ‘வாத்தி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • March 2, 2023 / 01:27 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘வாத்தி’ (தெலுங்கில் ‘SIR’) படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் – ஃபார்ச்சியூன் ஃபோர் சினிமாஸ் – ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சாய் குமார், சமுத்திரக்கனி, இளவரசு, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 13 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.93.70 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus