அடேங்கப்பா… தனுஷின் ‘வாத்தி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • April 10, 2023 / 05:07 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘வாத்தி’ (தெலுங்கில் ‘SIR’) படம் இந்த ஆண்டு (2023) பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.

இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் – ஃபார்ச்சியூன் ஃபோர் சினிமாஸ் – ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சாய் குமார், சமுத்திரக்கனி, இளவரசு, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருந்தனர்

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.120.83 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus