தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘வாத்தி’ (தெலுங்கு வெர்ஷன் – ‘SIR’) படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் – ஃபார்ச்சியூன் ஃபோர் சினிமாஸ் – ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சாய் குமார், சமுத்திரக்கனி, இளவரசு, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இதன் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.