தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர்’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். ‘வாத்தி’ (தெலுங்கு வெர்ஷன் – ‘SIR’) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறதாம்.
இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் – ஃபார்ச்சியூன் ஃபோர் சினிமாஸ் – ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோலில் சாய் குமார் நடிக்கிறார்.
இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், இன்று (ஜூலை 28-ஆம் தேதி) தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.