தனுஷ் – சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள ‘வாத்தி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • February 17, 2023 / 02:19 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘வாத்தி’ (தெலுங்கில் ‘SIR’) படம் இன்று (பிப்ரவரி 17-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் – ஃபார்ச்சியூன் ஃபோர் சினிமாஸ் – ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சாய் குமார், சமுத்திரக்கனி, இளவரசு, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus