அடேங்கப்பா… 5 நாட்களில் ‘யாத்திசை’ செய்த வசூல் இவ்ளோவா?

  • April 26, 2023 / 03:33 PM IST

இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘யாத்திசை’. இதில் ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலக்ஷ்மி, குரு சோமசுந்தரம், சந்திரக்குமார், செம்மலர் அன்னம், சுபத்ரா, சமர், விஜய் சேயோன், ராஜசேகர், வைதேகி, சீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சக்கரவர்த்தி இசையமைத்துள்ள இதற்கு அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘சிக்ஸ் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட் – வீனஸ் இன்போடெயின்மெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.2.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus