தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் “தர்மதுரை”. தற்போது இந்த படம் நாலு வருடங்களை ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவு செய்தது.
சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகியோரும் நடித்திருந்தார்கள்.
எம்.சுகுமாரன் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். விஜய் சேதுபதி இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.
நார்வே ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி இந்த படத்திற்காக பெற்றார். 64 ஆவது படங்களுக்கான தேசிய விருதுகள் நிகழ்ச்சியில் இந்த படத்தில் வரும் “எந்த பக்கம்” என்ற பாடலை எழுதியதற்காக வைரமுத்து விருதைப் பெற்றார்.
தற்போது இந்த படம் வெளியாகி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி இந்த படத்தின் இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவில் கமெண்ட் செய்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்கே.சுரேஷ் இந்தப்படத்தின் சீகுவல் குறித்து இயக்குனரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்வியின் மூலம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆர்கே சுரேஷ் குறிப்பிட்டுள்ளதாவது “தர்மதுரை இரண்டாம் பாகம் குறித்து பிளான் செய்யலாம். நான் ரெடியாக இருக்கிறேன்” என்று கமெண்ட் செய்துள்ளார்.
தற்போது விஜய்சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.