நானியின் ‘தசரா’வுக்காக தீக்ஷித் ஷெட்டி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • April 13, 2023 / 11:19 AM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘தசரா’ கடந்த மார்ச் 30-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கியுள்ளார். இதில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சாய் குமார், சமுத்திரக்கனி, ஷைன் டாம் சாக்கோ, பூர்ணா, தீக்ஷித் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க நடிகர் தீக்ஷித் ஷெட்டி ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus