சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான துருவ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான முதல் படம் ‘ஆதித்ய வர்மா’. இந்த படத்தை கிரிசய்யா இயக்கியிருந்தார்.
தெலுங்கில் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக்கான இந்த படத்தை முதலில் இயக்குநர் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கியிருந்தார். அது OTT-யில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.
‘ஆதித்ய வர்மா’வுக்கு பிறகு நடிகர் துருவ் விக்ரமுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைத் தொடர்ந்து துருவ் அவரது அப்பா விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.
சமீபத்தில், பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க துருவ் ஒப்பந்தமானார். இந்நிலையில், துருவ்வின் கால்ஷீட் டைரியில் இன்னொரு புதிய படம் இணைந்துள்ளதாம். இந்த படத்தை ‘டாடா’ மூலம் ஃபேமஸான இயக்குநர் கணேஷ்.கே.பாபு இயக்கவுள்ளாராம். இப்படத்தில் நடிப்பதற்காக துருவ்வுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.