துருவ நட்சத்திரம் படம் எப்பொழுது வெளியாகும் ?

  • July 2, 2022 / 05:58 PM IST

2015-ஆம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி . இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இமைக்கா நொடிகள் . நயன்தாரா , அதர்வா , அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து கோப்ரா என்கிற படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார் . ஸ்ரீநிதி , மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . ஏ .ஆர் . ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்திலிருந்து வெளியான தும்பி , தும்பி பாடலும் அதீரா என்கிற பாடலும் நல்ல வரவேற்பை தந்தது . முன்னதாக இந்த படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது . அதன் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது .

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது . இந்நிலையில் கோப்ரா படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இதனிடையே நடிகர் விக்ரம் நடிப்பில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படம் கோப்ரா படத்தின் வெளியீட்டு பின் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிறகு வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus