விரைவில் வெளியாகவுள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தின் பாடல்!

  • September 19, 2020 / 08:00 AM IST

தமிழ் சினிமா ரசிகர்கள் பல நாட்கள் காத்திருந்த துருவநட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் வாசுதேவ் மேனன் மறைமுகமாக கூறியுள்ளார்.

இதன் முதல் படியாக இவர் இந்த படத்தில் வரும் ஒரு பாடலை பாடி இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக காத்திருந்த துருவநட்சத்திரம் திரைப்படம் வெளியாகப் போவதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

2013ஆம் ஆண்டு துருவநட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்ற செய்தி வெளியாகி இருந்தது. தொடக்கம் முதலே பல காரணங்களால் இந்தப் படப்பிடிப்பு தடைபட்டுக் கொண்டே இருந்தது.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்த படத்தில், முதலில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் பின் அவர்களுக்கு இடையில் இருந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நடிகர் சூர்யா இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் செய்திகள் வந்தன.

பின் 2016ஆம் ஆண்டு நடிகர் விக்ரமை வைத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. அது சில பணதட்டுப்பாடு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு வைத்து, 2018 ஆம் ஆண்டில் டீஸர் ஒன்றை இந்த படக்குழு வெளியிட்டது. இந்தப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த ரீது வர்மா நடித்துள்ளார். இந்த படத்தை தற்போது வேல்ஸ் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் தயாரிக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus