கன்னட திரையுலகை தலைநிமிர வைத்த “தியா”

  • April 22, 2020 / 08:13 PM IST

இந்திய அளவில் பெரிய நிறுவனங்களின் கவனம் எல்லாம் தற்போது கன்னட திரையுலகை நோக்கியுள்ளது. காரணம் கேஜிஎஃப் 2 இல்லை மிக மிக குறைந்த பட்ஜெட் திரைப்படமான தியா தான்.

காதல் படங்களுக்கு எப்போதும் மவுசு குறைவதில்லை, அது எந்த மொழியாக இருந்தாலும் சரி, ரசிகர்கள் அந்த படத்தை வெற்றியடைய வைக்க தவறுவதே இல்லை. ஹரிதாஸ் முதல் 96 படம் வரை காதல் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். பொதுவாக கன்னட படங்கள் எதுவும் பிற மொழிகளில் மொழிப்பெயர்ப்போ, ரீமேக்கோ செய்வதில்லை. காரணம் அந்த படத்தின் கதைக்கரு அந்த மொழி கலாச்சாரத்தையே மையம் கொண்டு இருப்பதே அதற்கு காரணம்.

ஆனால் அதையும் மீறி பரட்டை என்ற அழகு சுந்தரம், கேஜிஎஃப், யூ டர்ன், அவனே ஸ்ரீமன்நாராயணன் போன்ற சில படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. அதிலும் கேஜிஎஃப் சர்வதேச அளவில் கன்னட திரைப்பட உலகிற்கு பெருமைத் தேடி தந்தது. தற்போது அந்த படத்தின் 2ம் பாகத்தை உலகமே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், தியா என்ற காதல் திரைப்படம் அமைதியாக வந்து ஆர்ப்பாட்டமான வெற்றியை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த படத்தை பார்த்த பல பிரபலங்களும் இதனை குறித்து ஆஹோ ஓஹோ என்று வர்ணிக்க, இந்த படத்திற்கு இலவசமாகவே விளம்பரம் கிடைக்க ஆரம்பித்து. இதன் விளைவாக சமூக வலைதளத்தில் வாய்ப்பேச்சின் மூலமாகவே இந்த படம் அனைவரிடம் போய் சேர்ந்தது. அதனால் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு பல மொழி தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துள்ளனர்.

கே.எஸ்.அசோகா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், இந்த படத்தின் உரிமையை வாங்குவதற்காக தினமும் பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா தெரிவித்துள்ளார். ரீமேக், மொழிமாற்றம், என பல வாய்ப்புகள் வருவதால் தியா திரைப்படம் பெரும் தொகைக்கு விற்கப்படலாம் என கருதப்படுகிறது.

சரி படத்தின் கதைக்கு போகலாம்…, மிட் 90ஸ் கிட்டான தியாவின் வாழ்க்கை தாங்க படத்தின் கதையே… ஹீரோயினை மையப்படுத்தி வெளியான கதை வெற்றிப்பெறுவது என்பது இந்த கால கட்டத்தில் சாதாரண விஷயம் இல்லை. கன்னட திரையுலகின் மீது இதுவரை பிற மொழி ரசிகர்களுக்கு இருந்து கிண்டல் மனோபாவத்தை இந்த படம் அடித்து நொறுக்கியுள்ளது…!

தமிழ் ரீமேக்கில் இந்த தியா கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கப்போறாங்க என்பதில் தான் இந்த படத்தின் வெற்றி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus