இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களில் அமீர் கானும் ஒருவர் . இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா . இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பை முடியவில்லை . அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாய்காட் லால் சிங் சத்தா ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது .மேலும் டிஜிட்டல் தளத்திலும் இந்த படம் தோல்வியை தழுவியது .
இந்நிலையில் அமீர் கான் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார் . அமீர்கான் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் புதிதாக வெளியாகி உள்ள ஏயூ வங்கி விளம்பரம் தான் அந்த சர்ச்சைக்கு காரணம். இந்து மதத்தின் படி திருமணமான நிலையில், வீட்டிற்குள் முதன் முதலாக மணப்பெண் தான் காலடி எடுத்து வைக்க வேண்டுமாம். அதை மாற்றி மணமகனான அமீர்கான் உள்ளே நுழையும் படி விளம்பரத்தை எடுத்து உள்ளனர். மணமகள் லட்சுமியை போன்றவள் என்றும் லட்சுமியையே அமீர்கான் அவமதித்து விட்டார் என்று சர்ச்சை பாலிவுட் உலகத்தில் தொடங்கி உள்ளது .
காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னோஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், கரப்டான பேங் சிஸ்டத்தை முதலில் ஏயூ பேங்க் மாற்ற முயற்சிக்கலாம், இந்து மத சடங்கை மாற்ற நீங்கள் யார்? என்கிற கேள்வியை எழுப்பி விளாசித் தள்ளி உள்ளார் விவேக் அக்னிஹோத்ரி. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .