ரன்பீர் கபூர் – அலியா பட் தங்களது மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டனரா?

  • November 11, 2022 / 01:39 AM IST

ஹிந்தி திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அலியா பட். இவருக்கு ஹிந்தி மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை அலியா பட்டிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஹைவே, 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஷி, கங்குபாய் கத்தியாவடி, RRR’ என படங்கள் குவிந்தது. அலியா பட் நடித்து சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸான படம் ‘பிரம்மாஸ்திரா’ (முதலாம் பாகம் : ஷிவா).

இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.425.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது அலியா பட் ஹிந்தியில் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை அலியா பட் திருமணம் செய்து கொண்டார். கடந்த நவம்பர் 6-ஆம் தேதி ரன்பீர் கபூர் – அலியா பட் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது, இது தான் அலியா பட்டின் குழந்தை என்று குறிப்பிட்டு போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட பல ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus