தெலுங்கு நடிகர்களின் படங்களை முதலில் ரசிகர்கள் பார்க்க வேண்டும் !

  • January 9, 2023 / 05:36 PM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . வருகின்ற 11 -ஆம் தேதி தமிழில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்து இருந்தது . நடிகர் அஜித்தின் துணிவு படமும் தமிழில் 11 ஆம் ஆம் தேதி வெளியாக உள்ளது . இதனால் இரண்டு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் .

இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு படம் ஜனவரி 11 -ஆம் தேதி தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் வெளியாகாது என்று அறிவித்த நிலையில் ஜனவரி 14 -ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது . ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர்களை சந்தித்த தில் ராஜு
” வாரிசு ( வாரிசுடு ) படம் எந்த ஒரு படத்திற்கும் போட்டியல்ல . சிரஞ்சீவி , பாலகிருஷ்ணா படங்களுடன் இந்தப் படம் போட்டியில்லை . தெலுங்கு திரையுலகத்தினரின் ஆலோசனைப்படி படத்தை ஜனவரி 14 -ஆம் தேதி வெளியிடுகிறோம் என்று கூறினார் . மேலும் வாரிசு படத்தை 14 ஆம் தேதி வெளியிட முக்கிய கரணம் தெலுங்கு படங்களை முதலில் ரசிகர்கள் பார்க்க வேண்டும் அதனால் தான் வாரிசு படம் தள்ளி வைக்கப்பட்டது என்று கூறியுள்ளார் .

தெலுங்கில் நேரடிப் படங்களுக்குதான் அதிக திரையரங்குகள் தர வேண்டும் என்று கடந்த சில மாதகங்களாகவே சர்ச்சை எழுந்து வந்துது . பாலகிருஷ்ணா , சிரஞ்சீவி படங்கள் முதல் சில நாட்கள் நல்ல வசூலைப் பெரும் பெறும் நிலையில் ” வாரிசுடு ” படத்தின் வெளியீட்டை தில் ராஜு தள்ளி வைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus