தமிழில் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த தில் ராஜு !

  • January 19, 2023 / 10:01 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . படம் வெளியாவதற்கு முன் இவர் நடிகர் விஜய் தான் நம்பர் 1 ஸ்டார் என்று சொன்னது சர்ச்சை ஆனது . தற்போது வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு தொடர்ந்து தமிழில் படம் தயாரிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது . அந்த வகையில் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும் இரண்டு முன்னணி தெலுங்கு இயக்குனர்கள் முறையே சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷை வைத்து விரைவில் படம் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .

சரியான கதை அமைந்தால் சூர்யா , அஜித் உட்பட பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார் தில் ராஜு என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus