விஜய்க்கு பின் சிவகார்த்திகேயன் !

  • December 28, 2022 / 01:02 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்து முடிந்தது . இந்த விழாவை பிரமாண்டமாக நடத்தி முடித்தார் தயாரிப்பாளர் தில் ராஜு . வருகின்ற பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாக உள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க வாரிசு படத்தை தொடர்ந்து மேலும் ஒரு தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறார் தில் ராஜு . அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்றும் அந்த படத்தை தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus