புதிய தேதியை அறிவிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு !

  • January 7, 2023 / 11:32 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . வருகின்ற 11 -ஆம் தேதி தமிழில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்து இருந்தது . நடிகர் அஜித்தின் துணிவு படமும் தமிழில் 11 ஆம் ஆம் தேதி வெளியாக உள்ளது . இதனால் இரண்டு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் .

இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு படம் ஜனவரி 11 -ஆம் தேதி தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் வெளியாகாது என்று கூறப்படுகிறது . புதிய வெளியீட்டு தேதியை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus