தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • March 6, 2023 / 06:53 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இப்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு (2022) வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’ ஆகிய இரண்டு படங்களிலும் செல்வராகவனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

செல்வராகவன் ஹீரோவாக நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘பகாசூரன்’. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியிருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 5-ஆம் தேதி) இயக்குநரும், நடிகருமான செல்வராகவனின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, செல்வராகவன் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus