சமீபத்தில் 1996 ஆம் வருடம் அஜித்குமார் நடிப்பில் வெளியான “காதல் கோட்டை” திரைப்படம் 24 வருடங்களை நிறைவு செய்தது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியன், நடிகர் அஜித் பற்றி பாராட்டி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அஜித் பற்றி அவர் கூறியுள்ளதாவது” அஜித் மிகவும் எளிமையான மனிதர். யாரிடமும் பெரிய நடிகர் என்ற அகந்தையை காட்டியதே இல்லை. படப்பிடிப்பின்போது சூட்டிங் 5 மணிக்கு இருந்தால் நான் நாலரை மணிக்கு தான் வருவேன், ஆனால் அஜித் 4 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். அவர் இயற்கையிலேயே நல்ல கலைஞர். அவரின் இந்த டெடிகேஷனை பார்த்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மிக அருமையாக நடிப்பார் அதனால் அவரிடம் இருந்து ஒன்ஸ்மோர் கேட்பதற்கான வேலை இல்லை. காதல் கோட்டை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்த பிறகு தான் நன்றாக நடித்திருக்கிறேனா என்று என்னிடம் வந்து கேட்டார். ஆனால் அவர் மிக அருமையாக ஏற்கனவே நடித்திருந்தார் என்பதுதான் உண்மை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அது நடிகர் அஜித்திற்கு பொருந்தும்” என்று பாராட்டியிருக்கிறார்.
“காதல் கோட்டை” படத்தில் நடிகர் அஜித்துடன் தேவயானி, ஹீரா ராஜகோபால், கரன் ஆகியோர் நடித்திருந்தார்கள். சிவசக்தி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள்.தேவா இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
தற்போது நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் ஹூமா குரேஷி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். லாக்டோன் காரணமாக இந்த படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.