விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் இத்தனை நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதா?… இயக்குநர் அஜய் ஞானமுத்து எடுத்த அதிரடி முடிவு!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் இவர் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படம் நேற்று (ஆகஸ்ட் 31-ஆம் தேதி) தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ, ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மீனாக்ஷி, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் நீளம் (3 மணி நேரம்) மிக அதிகம் என்பதை பலரும் தெரிவித்த வண்ணமுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

Share.