சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் தான் ‘ராஜா ராணி’. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லிக்கு வழங்கியது.
‘தெறி’ ஹிட்டானதும் அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது. ‘பிகில்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கி வரும் புதிய படம் ‘ஜவான்’. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார்.
இப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் ரிலீஸாகுமாம். இயக்குநர் அட்லி 2014-ஆம் ஆண்டு நடிகை ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். ப்ரியா ‘சிங்கம், நான் மகான் அல்ல, நடுநிசி நாய்கள்’ போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், அட்லி – ப்ரியா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘மீர்’ (MEER) என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில், அட்லி – ப்ரியா இருவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஸ்டில்ஸை அட்லி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.