லவ் டுடே இயக்குனரை பாராட்டிய அட்லீ !

  • December 5, 2022 / 01:01 AM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் லவ் டுடே படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார் . இந்த படம் நவம்பர் 25-ஆம் தேதி தெலுங்கு பேசும் மாநிலங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது லவ் டுடே படத்தை பார்த்த இயக்குனர் அட்லீ இந்த படத்தை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பதில் அளித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus