கர்ப்பமாக இருப்பதை அறிவித்த இயக்குநர் அட்லியின் மனைவி ப்ரியா… குவியும் வாழ்த்துக்கள்!

  • December 16, 2022 / 04:12 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் தான் ‘ராஜா ராணி’. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லிக்கு வழங்கியது.

‘தெறி’ ஹிட்டானதும் அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது. ‘பிகில்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கி வரும் புதிய படம் ‘ஜவான்’. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு (2023) ஜூன் 2-ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸாகுமாம். இயக்குநர் அட்லி 2014-ஆம் ஆண்டு நடிகை ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார்.

ப்ரியா ‘சிங்கம், நான் மகான் அல்ல, நடுநிசி நாய்கள்’ போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இயக்குநர் அட்லியின் மனைவியும், நடிகையுமான ப்ரியா கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அட்லி – ப்ரியா இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus