கார்த்தியின் ‘சுல்தான்’-க்காக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • October 19, 2022 / 12:37 PM IST

பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனாகவும், நடிகர் சூர்யாவின் தம்பியாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லோருக்கும் அமைந்து விடாது. ஆனால், கார்த்திக்கு அமைந்தது.

அது தான் ‘பருத்திவீரன்’ படம். இந்த படத்தை இயக்குநர் அமீர் இயக்கியிருந்தார். ‘பருத்திவீரன்’ ஹிட்டிற்கு பிறகு கார்த்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான், விருமன், பொன்னியின் செல்வன் (முதல் பாகம்)’ என படங்கள் குவிந்தது.

இதில் ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாக்யராஜ் கண்ணன் இதனை இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, நெப்போலியன், லால், ஹரிஷ் பெராடி, ராமச்சந்திர ராஜு மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus