தனுஷின் ‘மாரி 2’-வுக்காக இயக்குநர் பாலாஜி மோகன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • October 13, 2022 / 05:10 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2002-ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தன் மகன் தனுஷை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார் கஸ்தூரி ராஜா. இந்த படத்துக்கு பிரபல இயக்குநரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படம் ஹிட்டானதும், செல்வராகவனே தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தினை இயக்கினார். இதுவும் வெற்றி பெற்றவுடன், தனுஷ் நடித்த படம் ‘திருடா திருடி’. சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ என்ற பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்பாடலுக்காகவே அப்படம் மெகா ஹிட்டானது.

அதன் பிறகு தனுஷுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாரி 2’. இந்த படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி மோகன் இதனை இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் டொவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலக்ஷ்மி, ரோபோ ஷங்கர், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக இயக்குநர் பாலாஜி மோகன் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus