சூர்யா – விக்ரம் இணைந்து நடித்த ‘பிதாமகன்’ படத்துக்காக பாலா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • March 22, 2023 / 01:21 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 2’ மற்றும் இயக்குநர் சிவா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிதாமகன்’. இதில் சூர்யாவுடன் இணைந்து விக்ரமும் நடித்திருந்தார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் சங்கீதா, லைலா, மனோபாலா, கருணாஸ், மகாதேவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட்டான இப்படத்தை ‘எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் வி.ஏ.துரை தயாரித்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக இயக்குநர் பாலா ரூ.1.15 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus