என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் – பாரதிராஜா வேண்டுகோள்!

  • July 17, 2020 / 06:17 PM IST

1977 ஆம் வருடம் வெளியான “பதினாறு வயதினிலே” படத்தின் மூலம் பாரதிராஜா இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் கிராமம் தழுவிய கதைகளை படமாக்குவதில் வல்லவர். இந்த திறமையான இயக்குனர் இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இவர் 2004 ஆம் ஆண்டு “பத்மஸ்ரீ” என்ற என்ற பட்டத்தை பெற்றார்.

தற்போது தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள பாரதிராஜா, தன் பிறந்தநாளையொட்டி யாரும் தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். கொரோனா காரணமாக அனைவரும் பொறுப்பாக நடந்து கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

இவர் கூறியுள்ளதாவது “என் இனிய தமிழ் மக்களே, என் கலைத்துறை நண்பர்களே, சொந்தங்களே பந்தங்களை கொரோனா எதிரொலி காரணமாக முதல் முதலில் உங்கள் வாழ்த்துக்களை நீங்கள் எங்கிருந்து கொடுத்தாலும் மனம் கனிந்து ஏற்றுக்கொள்கிறேன். யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்”.

இவர் தன் திரையுலக பயணத்தில் ஆறு தேசிய விருதுகளையும், 2 தமிழ்நாடு மாநில விருதுகளையும், நந்தி விருதையும் மேலும் பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் தற்போது “மீண்டும் ஒரு மரியாதை” படத்தை எழுதி, நடித்து, இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் “மாநாடு” படத்திலும் இவர் நடிக்கின்றார்.

இவர் இயக்கத்தில் நடித்த நடிகர் நடிகைகள் இன்றும்கூட அவருடன் பணிபுரிந்தது பற்றி பூரிப்பாக கூறுவார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus