Trisha & Cheran : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

  • February 21, 2024 / 10:26 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் “மௌனம் பேசியதே, சாமி, கில்லி, உனக்கும் எனக்கும், அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் 1 & 2, லியோ” போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், த்ரிஷா தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ‘கர்ஜனை, ராம், சதுரங்க வேட்டை 2, ஐடென்டிட்டி, விடாமுயற்சி’ என 5 படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கொடுத்துள்ள பேட்டியில் “2017-ல் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தார்கள்” என்றும் குறிப்பாக “நடிகை த்ரிஷாவை தான் அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் கேட்டார். அவரை நடிகர் கருணாஸ் தான் பேசி அழைத்து வந்தார். இதற்காக த்ரிஷாவுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்பட்டது” என்றும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது, இது குறித்து பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus