“முதலில் தயங்கினாலும், அந்த காரணத்துக்காக அஜித் ஓகே சொன்னார்”… உண்மையை போட்டுடைத்த ‘வலிமை’ இயக்குநர் ஹெச்.வினோத்!

  • December 18, 2021 / 06:11 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse, மேக்கிங் வீடியோ, ‘நாங்க வேற மாரி’ பாடல் மற்றும் அம்மா பாடலையும் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse, மேக்கிங் வீடியோ, ‘நாங்க வேற மாரி’ பாடல் மற்றும் அம்மா பாடல் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2022) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2022) ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “அஜித் சார் எப்பவுமே ஒரு இயக்குநர் என்ன கேட்கிறாரோ அதை அப்படியே ஸ்க்ரீனில் கொண்டு வருபவர்.

 

நான் இந்த படத்துக்காக தலை முடிக்கு கருப்பு ஹேர் டை அடிக்க சொன்னேன், முதலில் அவர் தயங்கினார். பின், கதையில் அவரின் கேரக்டரை புரிந்துகொண்டு கருப்பு ஹேர் டை அடிக்க சம்மதித்தார். அஜித்துடன் அடுத்து நான் பண்ணப்போகும் படத்தில் குறைவான ஆக்ஷன் காட்சிகளே இருக்கும் முக்கியமான ஒரு சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து அப்படத்துக்கான கதைக்களத்தை அமைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus