லோகேஷ் கனகராஜிடம் பேசிய இயக்குனர் ஹரி !

  • June 8, 2022 / 03:31 PM IST

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

கடந்த வாரம் படம் வெளியான அன்றே சினிமா பிரபலங்களுக்காக பிரத்யேகக் காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டினர். அதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தியேட்டர்களில் படத்தைப் பார்த்தார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் கமர்சியல் படத்திற்கு தனக்கென தனி பாதை அமைத்து அதில் உச்சம் தொட்ட இயக்குனர் ஹரி . அவர் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷிற்கு அலைப்பேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தேன் அதற்கு லோகேஷ் இது எனது வெற்றி என்று சொல்லாதீங்க சார் நமது வெற்றி என்று சொல்லுங்கள் என்று லோகேஷ் தெரிவித்தார் என்று ஹரி கூறியுள்ளார். இந்நிலையில் லோகேஷின் வெற்றியையை கோலிவுட்டே கொண்டாடி வருகிறது

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus